திருப்பதி ஏழுமலையான் பாடல்
திருப்பதி ஏழுமலையான் ( பெருமாள் ) ஸ்ரீநிவாசா கோவிந்தா பாடல் வரிகள் தமிழில் மற்றும் ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் கருட சேவை மற்றும் பல வாகனங்களை பற்றி புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள்.
Tirupathi Tirumalai Sri Venkateswara Swami Vaari Temple - Srinivasa Govinda Song Lyrics in Tamil. Srivari Brahmotsavam - Information with photos about the festival, Garuda Seva and many other vahana (vehicle) sevas.
ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மலா கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
நந்த நந்தனா கோவிந்தா
நவநீத சோர கோவிந்தா
பசு பாலக ஸ்ரீ கோவிந்தா
பாப விமோசன கோவிந்தா
துஷ்ட சம்ஹார கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலக கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
வஜ்ர மகுடதர கோவிந்தா
வராக மூர்த்திவி கோவிந்தா
கோபி ஜனலோல கோவிந்தா
கோவர்த்தனோத்தார கோவிந்தா
தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்தன கோவிந்தா
பட்சி வாகன கோவிந்தா
பாண்டவ ப்ரிய கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
மத்ஸ்ய கூர்மா கோவிந்தா
மதுசூதனஹரி கோவிந்தா
வராக நரசிம்ம கோவிந்தா
வாமன ப்ருகுராம கோவிந்தா
பலராமாநுஜ கோவிந்தா
பௌத்த கல்கிதர கோவிந்தா
வேணுகான ப்ரிய கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
சீதா நாயக கோவிந்தா
ச்ரித பரிபாலக கோவிந்தா
தரித்ர ஜனபோஷக கோவிந்தா
தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா
அனாத ரட்சக கோவிந்தா
ஆபத் பாந்தவ கோவிந்தா
சரணாகத வத்ஸல கோவிந்தா
கருணா சாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
கமல தளாக்ஷ கோவிந்தா
காமித பலதாதா கோவிந்தா
பாப விநாசக கோவிந்தா
பாஹி முராரே கோவிந்தா
ஸ்ரீமுத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீவத்சாங்கித கோவிந்தா
தரணீ நாயக கோவிந்தா
தினகர தேஜா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
பத்மாவதி ப்ரிய கோவிந்தா
ப்ரசன்ன மூர்த்தி கோவிந்தா
அபயஹஸ்தப்ரதர்சன கோவிந்தா
மர்த்யாவதாரா கோவிந்தா
சங்க சக்ரதர கோவிந்தா
சார்ங்க கதாதர கோவிந்தா
விரஜா தீரஸ்தா கோவிந்தா
விரோதி மர்தன கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
சாளகிராமதர கோவிந்தா
சகஸ்ர நாமா கோவிந்தா
லக்ஷ்மீ வல்லப கோவிந்தா
லக்ஷ்மண ஆக்ரஜ கோவிந்தா
கஸ்தூரி திலக கோவிந்தா
காஞ்சனாம்பரதர கோவிந்தா
கருடவாகன கோவிந்தா
கஜராஜ ரக்ஷக கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
வானர சேவித கோவிந்தா
வாரதி பந்தன கோவிந்தா
ஏழுமலைவாசா கோவிந்தா
ஏக ஸ்வரூபா கோவிந்தா
ஸ்ரீராம கிருஷ்ணா கோவிந்தா
ரகுகுல நந்தன கோவிந்தா
பிரத்யக்ஷ தேவா கோவிந்தா
பரம தயாகர கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
வஜ்ரகவசதர கோவிந்தா
வைஜயந்தி மால கோவிந்தா
வட்டிகாசுப்ரிய கோவிந்தா
வசுதேவ தனயா கோவிந்தா
பில்வ பத்ரார்ச்சித கோவிந்தா
பிட்சுக சம்ஸ்துத கோவிந்தா
ஸ்திரீபும் ரூபா கோவிந்தா
சிவகேசவ மூர்த்தி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
பிரம்மாண்ட ரூபா கோவிந்தா
பக்த ரட்சக கோவிந்தா
நித்ய கல்யாண கோவிந்தா
நீரஜநாப கோவிந்தா
ஹதீராம ப்ரிய கோவிந்தா
ஹரி சர்வோத்தம கோவிந்தா
ஜனார்த்தன மூர்த்தி கோவிந்தா
ஜகத்சாக்ஷி ரூபா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
அபிஷேகப்ரிய கோவிந்தா
ஆபன் நிவாரண கோவிந்தா
ரத்ன கிரீடா கோவிந்தா
ராமாநுஜநுத கோவிந்தா
சுயம் ப்ரகாச கோவிந்தா
ஆஸ்ரித பக்ஷ கோவிந்தா
நித்யசுபப்ரத கோவிந்தா
நிகில லோகேசா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
ஆனந்த ரூபா கோவிந்தா
ஆத்யந்த ரஹிதா கோவிந்தா
இகபர தாயக கோவிந்தா
இபராஜ ரக்ஷக கோவிந்தா
பரம தாயாளோ கோவிந்தா
பத்மநாப ஹரி கோவிந்தா
பத்மநாப ஹரி கோவிந்தா
திருமலை வாசா கோவிந்தா
துளசி வனமால கோவிந்தா
கோவிந்த ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
சேஷாத்ரி நிலயா கோவிந்தா
சேஷ சாயினி கோவிந்தா
ஸ்ரீ ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
கோவிந்த ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மெய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
ஏற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
ஓம் நமோ நாராயணா! ஓம் நமோ நாராயணா! ஓம் நமோ நாராயணா!
ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் பற்றிய சிறு குறிப்பு
ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் தமிழ் மாதமான புரட்டாசி மாதம் திருப்பதியில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தின் போது திருப்பதி ஏழுமலையான் வெங்கடாசலபதி மற்றும் அவரது துணைவியார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன் எழுந்தருளி கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில் பல வாகனங்களில் உலாவந்து மக்களுக்கு அருள்பாலித்து எல்லா செல்வ வளங்களையும் வழங்குகிறார். ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் விழாவினைக் காண தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதி வருகின்றனர். இது திருப்பதி திருமலையில் நடைபெறும் விழாக்களில் மிகப்பெரிய விழாவாகும்.
துவஜாரோஹணம் (கொடியேற்றம்) (துவஜம் - கொடி, ஆரோஹணம் - ஏறுதல்) பிரம்மோத்ஸவம் தொடக்கம் (நாள் 1 காலை) , கொடிமரத்தில் புனிதக் கொடியை ஏற்றி திருப்பதி ஏழுமலையானை இவ்விழாவிற்கு எழுந்தருளச் செய்வது.
வாகன சேவை
- பெரிய சேஷ வாகனம் (நாள் 1 மாலை)
- சின்ன சேஷ (கிருஷ்ணர் அலங்காரம்) வாகனம் (நாள் 2 காலை)
- ஹம்ஸா (அன்னப்பறவை) வாகனம் (நாள் 2 மாலை)
- சிம்ம வாகனம் (நாள் 3 காலை)
- முத்யாபு பாண்டிரி (முத்துப்பந்தல் ) வாகனம் (நாள் 3 மாலை)
- கல்பவிருட்ச (கற்பக விருட்சம்) வாகனம் (நாள் 4 காலை)
- சர்வ பூபால (அரசர்களுக்கும் அரசன்) வாகனம் (நாள் 4 மாலை)
- மோகினி அவதாரம் (நாள் 5 காலை)
- கருட சேவை (நாள் 5 மாலை)
- ஹனுமந்த வாகனம் (நாள் 6 காலை)
- ஸ்வர்ண ரதம் (தங்கத்தேர்) (நாள் 6 மாலை)
- கஜ (யானை) வாகனம் (நாள் 6 மாலை)
- சூர்யபிரபா வாகனம் (நாள் 7 காலை)
- சந்திரபிரபா வாகனம் (நாள் 7 மாலை)
- ரதோத்ஸவம் (தேரோட்டம்) (நாள் 8 காலை)
- அஸ்வ (குதிரை) வாகனம் (நாள் 8 மாலை)
- பல்லகி (பல்லக்கு) உற்சவம் (நாள் 9 காலை)
- சக்கரஸ்நானம் (நாள் 9 காலை)
- தங்க திருச்சி (பல்லக்கு) உற்சவம் (நாள் 9 மாலை)
த்வஜாவரோஹணம் (பிரம்மோத்ஸவம் நிறைவு) (நாள் 9 மாலை).